செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ படத்தின் டீசர் வெளியீடு

லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ படத்தின் டீசர் வெளியீடு

1 minutes read

இந்திய நுகர்வோர் சந்தைகளில் முன்னணி முத்திரையாக திகழும் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல நட்சத்திர நடிகருமான லெஜன்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லீடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தனித்துவமான இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லீடர்’ திரைப்படத்தில் லெஜன்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப் ,பாயல் ராஜ்புத், லால் ,பிரபாகரன், அமிர்தா ஐயர், வி டி வி கணேஷ் ,இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.  தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்னையில் உள்ள கமலா பட மாளிகை  வளாகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இந்த டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் எக்சன் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தை வழங்குவதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.