செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

1 minutes read

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக – விவசாயியாக-  நடித்திருக்கும் ‘நூறு சாமி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாய கனவோ’ எனும்  முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் ‘நூறு சாமி ‘ திரைப்படத்தில் விஜய் அண்டனி, சுவாசிகா, அஜய் திஷான்,  லிஜோ மோல் ஜோஸ்,  கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், முனீஸ்காந்த், பாடினி குமார் , சுப்பிரமணிய சிவா , ஜென்சன் திவாகர் ,பக்ஸ் பகவதி பெருமாள், வினோதினி, கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். விவசாயியின் வாழ்வியல் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதில் இடம்பெற்ற ‘பேச பேச ஒரு மாய காற்றில் மிதந்தேன்..’ எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் மற்றும் பின்னணி பாடகி சின்மயி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.