செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

1 minutes read

தனித்துவமான நடிப்பின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘கர’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணம்மா என் கண்ணம்மா ‘ எனும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படத்தில் தனுஷ், மமீதா பைஜு, கே. எஸ் .ரவிக்குமார் , கருணாஸ் , ஜெயராம்,  பிருத்வி பாண்டியராஜன் , சுராஜ் வெஞ்சரமூடு , எம். எஸ் .பாஸ்கர்,  ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்ணுக்குள்ள நீ தானே..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் தனுஷ் எழுத , பின்னணி பாடகர் தனுஷ் பாடியிருக்கிறார். மெல்லிசை –  பிரிவு – சோகம் – அன்பு ஆகியவற்றின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் …இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.