செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜனநாயகன்’ படக்குழு கடும் எச்சரிக்கை

ஜனநாயகன்’ படக்குழு கடும் எச்சரிக்கை

1 minutes read

”விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் கசிந்த காட்சிகளை சட்டவிரோதமாக பரப்பினால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அப்பட குழுவின் சட்டத்தரணி பொது அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

” ஜனநாயகன் படத்திலிருந்து கசிந்த காட்சிகளை சட்ட விரோதமாக பரப்பியது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு ஏற்கனவே ஆறு நபர்களை கைது செய்துள்ளது. சமூக ஊடகங்கள் அல்லது டிஜிட்டல் தளங்கள் மூலம் கசிந்த காட்சிகளை எந்த வடிவத்திலாவது பதிவிறக்கம் செய்பவர்கள்-  பகிர்பவர்கள் – முன் அனுப்புபவர்கள் அல்லது பரப்புவோர்கள் கண்டறியப்பட்டு ,அவர்கள் மீது உடனடியாக குற்றவியல் வழக்கு தொடரப்படும். விதிவிலக்கு இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ”என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து சில காட்சிகள் வெளியானதற்கு படக் குழுவினரில் ஒரு பிரிவினரே காரணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது என்பதும், இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.