செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மே மாதத்தில் வெளியாகும் நடிகர் விது நடிக்கும்’ 29′

மே மாதத்தில் வெளியாகும் நடிகர் விது நடிக்கும்’ 29′

1 minutes read

நடிகர் விது கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் அறிமுகமாகும் ’29 ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக காணொளி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் – கதாசிரியர் – வசனகர்த்தா-  என படைப்பு ஆளுமை மிக்க ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29 ‘ திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொருவரது வாழ்க்கையில் 29 ஆவது வயது என்பது முக்கியம் என்பதால்… அதனை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ மற்றும் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… இந்தத் திரைப்படம் எப்போது வெளியாகும் ?என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் எட்டாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக காணொளி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே ‘அயோத்தி’ மற்றும் ‘கிஸ்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரீத்தி அஸ்ராணி இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பதால்.. இளம் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.