நண்டு மசாலா

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – 2 துண்டு
தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8
நண்டு மசாலா செய்ய
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
தக்காளி – 5 நறுக்கியது
உப்பு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
நண்டு – 2 கிலோ
தண்ணீர் – 2 கப்
கறிவேப்பிலை

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, இஞ்சி, தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து 4 நிமிடம் வறுக்கவும்.
  2. பின்பு ஆறவிட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
  3. அடுத்து அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. பின்பு அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும் .
  6. அடுத்து உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து 6 நிமிடம் வதக்கவும்.
  7. பின்பு நண்டு சேர்த்து கலந்துவிடவும், பிறகு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
  8. கடைசியாக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  9. நண்டு மசாலா தயார்!

ஆசிரியர்