13
பூக்களை விரும்பாத எனக்கு
ஏனோ
சிவப்பு மஞ்சள்
பூக்களைக் கண்டால்
இதயம் கனத்து
விழி கலங்கி விடும்…
கையில் இருக்கிற
அந்தப் பூக்களில்
கலைந்து போன
ஒரு கனவு தெரியும்,
அதன் பூ முகங்களில்
என் சகோதர
உறவுகள்
புன்னகைப்பர்…
சற்றே
அழுத்திப் பிடித்தால்
அதற்கு வலித்துவிடுமே என்று
என் மனம் துடிக்கும்…
கால நீட்சியில்
எதுவும் மாறலாம்..
ஆனால்
அந்தக் கனவுகள் மட்டும்…..
கோபிகை
புகைப்படம் – தமிழ் முகுந்தன்