உணவுக்காக காத்திருக்கும் காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், காசா நகரில் உள்ள அல் பக்கா கபே உணவகத்தில் உணவுக்காக பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலர் காத்திருந்தனர். அப்போது அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
அத்துடன், உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 23 பேர் உயிரிழந்தனர். அதேபோல் தெற்கு காசாவில் உணவு தேடி வந்த 11 பேரை, இஸ்ரேலிய படைகள் கொன்றதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி : காஸாவில் இனப்படுகொலை; இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் இரத்து செய்யுமாறு வலியுறுத்து!
இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 74 பொதுமக்கள் உயிரிழந்ததாக காசா தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர் 2ஆவது ஆண்டை நெருங்கி வருகின்றது.
காசா – இஸ்ரேல் போரில் இதுவரை 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.