செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு பொங்கித்தகிக்கிறது புதைகுழிகள் | கேசுதன்

பொங்கித்தகிக்கிறது புதைகுழிகள் | கேசுதன்

0 minutes read

 

அதோ
காணாமல் போன என் குழந்தையின்
பால் புட்டி
நாவறண்ட பிஞ்சின் நெஞ்சில் கல்லை
போட்ட கயவன் எவன்

பல கதைகள் பேசும் குழிகள் அவை
மூச்சறுந்து போனது என் தேசம்
பல ஆண்டுகள் தாண்டியும்
பல கதைகள் சொல்லும் தேகங்களோடு
வாழ்க்கையிழந்த வண்ணங்கள்
ஏராளம்

போர்த்தடம் மிதிக்க வக்கற்றவன்
வந்தோர் போவோரை வழிமறித்து
கொன்ற பயங்கரவாதி ஆனாய்
எப்படி உனக்கு பயங்கரவாதி
தழிழன் ஆவான்

வலி கூட அறியாத குழந்தை
உனக்கு பயங்கரவாதி எப்படி
ஆனான்

தகிக்கிறது குழிகள்
என்புகளாய் போராடும்
என் தேசம் காண்பாய் பிரானே

எட்டி பிடிக்கும் தூரத்தில் கழன்ற
தோட்டாக்கள் கவ்விய தலைகள்
எத்தனை நீ அறிவாய்

அன்று
பள்ளி மாணவியின் குறியில்
புணர்ந்த அணுக்கள் எத்தனை ஆயிரம்
சொல்லிடுமா தன் சோகத்தினை
வந்தவன் புணர்ந்து விட்டு
செல்ல அவள் ஒன்றும்
பொம்மையல்லவே

மானமிழந்த மங்கைகள் என்
தமிழ்ச் சாதியில் காணாய்
இருந்தும் நீ ஏன் கொன்றாய்

அவளே மாய்த்துக்கொள்வாலே
வேங்கைகள் மண்ணில் பிறந்த
மங்கையர் அல்லவா

புலியின் கைகளுக்கு விலங்கிட்டு
வேடிக்கை பார்த்த ஈனச்சாதியில்
பிறந்தவனே
எக்கருவில் பிறந்தாய்.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.