செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு விஜய் வெற்றி | மேற்கு – ஐரோப்பிய ஊடகங்களின் பார்வை | அ.நிக்ஸன்

விஜய் வெற்றி | மேற்கு – ஐரோப்பிய ஊடகங்களின் பார்வை | அ.நிக்ஸன்

2 minutes read

* ஆளுங்கட்சி எதிர்ப்பு அலையை விஜய் சரியாகப் பயன்படுத்தினார் என்கிறது புலூம்பேர்க்

* இரண்டாம் கட்டத் தலைவர்கள் விஜய்யிடம் பலமாக இல்லை என்கிறது பிபிசி

* பிரம்மாண்டமான அறிமுகம் என்கிறது ரைமஸ் ஒப் இந்தியா

— — —

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில். தமிழ்நாடு பிரதான மூலோபாயம் என்ற அடிப்படையில் மிக சமீபகாலமாக, சர்வதேச ஊடகங்கள், சட்டமன்றத் தேர்தல் பற்றிய விமர்சனங்களை முன்வைத்து வந்தன.

தமிழ்நாட்டின் நீண்டகாலப் பாரம்பரியத்தின் அடுத்த கட்டமாக பிபிசி (BBC) ஆங்கில சேவை சித்தரிக்கிறது. திரையுலக பிம்பம் அரசியலாக மாறுவதாகவும் பிபிசி விமர்சிக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்த அத்தியாயம் ஆரம்பம் என்ற தொனியிலும் அந்த விமர்சனம் அமைந்துள்ளது.

ஆனால், விஜய்யின் வெறும் நட்சத்திர அந்தஸ்தால் மாத்திரம் பெற்றது அல்ல. விஜய் காட்டிய முழுநேர அரசியல் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த வெற்றி எனப் அல் ஜசீரா (Al Jazeera) செய்தி ஊடகம் பாரட்டியுள்ளது.

விஜய்யின் கட்சியை ஒரு “புதிய சக்தி” என்று குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க பாரம்பரியக் கட்சிகளை அவர் வீழ்த்தியதை ஒரு பெரும் ஆச்சரியமாக அல் ஜசீரா பதிவிட்டுள்ளது.

ஆளுங்கட்சியான திமுகவை, சினிமா நட்சத்திரம் ஒன்று வீழ்த்தியதைச் சுட்டிக்காட்டி, திரைப்பட நட்சத்திரங்களைத் தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யும், தமிழ் நாட்டின் வரலாறு தொடர்வதாக அசோசியேட் பிறஸ் (Associated Press – AP) விமர்சிக்கிறது

தமிழ் நாட்டில் நிலவிய ஆளுங்கட்சி எதிர்ப்பு அலையை (Anti-incumbency) விஜய் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும், ஆளுமை மிக்க தலைவராக விஜய் உருவெடுத்துள்ளதாகவும் புலூம்பேர்க் (Bloomberg) செய்தித் தளம் விமர்சித்துள்ளது.

புதுடில்லி ஊடகங்கள் இந்த வெற்றியை மிகவும் நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்துள்ளன.

குறிப்பாக விஜய்யின் வெற்றியை பிரம்மாண்டமான அறிமுகம் (Blockbuster debut) என ரைமஸ் ஒப் இந்தியா (The Times of India) வர்ணித்துள்ளது.

அதாவது, ஒரு திரைப்படம் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூலை பெறுவதைப் போல, விஜய் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதே அதன் தொனியாகும்.

அதேநேரம், சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மத்தியில் விஜய்க்கு கிடைத்த ஆதரவே இந்த வெற்றிக்குக் காரணம் என இந்தியன் எக்ஸ்பிறஸ் (The Indian Express) சுட்டிக்காடடியுளளது.

திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்தை விஜய் உடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

விஜய்யின் வெற்றி தமிழ் நாட்டு அரசியலின் இலக்கணத்தையே மாற்றியமைக்கலாம் என்று வ6ிமர்சனம் செய்துர்ள்ளது. தி இந்தது (The Hindu)

எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு, திமுக மற்றும் அதிமுகவை முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளியதை “மிகப்பெரிய சாதனை எனப் பாராட்டியுள்ளது த பிறின்ட் (The Print) என்ற செய்தி ஊடகம்.

விஜய்யின் வெற்றியைப் பகுத்தறிவற்றது என்று ஒதுக்கிவிட முடியாது என்றும் கூறியுள்ளது.

அதேநேரம், தமிழ்நாட்டு மக்கள் சினிமாவையும் அரசியலையும் எவ்வாறு பிணைக்கிறார்கள் என்பதை சமூகவியல் ரீதியாக த பிறின்ட் மேலும் விளக்கியுள்ளது.

அதேவேளை, விஜய்யின் வெற்றிக்கு திரைப்படப் புகழே முக்கியக் காரணம் என்பதால், “நிர்வாக அனுபவம் இல்லாத ஒருவரால் பெரிய பொருளாதாரத்தத்தைக் கொண்ட மாநிலத்தை வழிநடத்த முடியுமா என்ற ஒரு மெல்லிய சந்தேகத்தைச் சீனப் பொருளாதாரப் பகுப்பாய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, விஜய்யின் கட்சிக்கு இன்னும் தெளிவான சமூக-பொருளாதாரக் கொள்கைகள் இல்லை என்றும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவரிடம் பலமாக இல்லை என்றும் BBC தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வெற்றி ஒரு தற்காலிக எழுச்சியா அல்லது நிரந்தரமானதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலில் உதயநிதி vs விஜய் என்ற போட்டி இன்னும் கடுமையாக இருக்கும் என (thefederal) என்ற ஆங்கில ஊடகங்கள் மதிப்பீடு செய்கின்றன.

திராவிடக் கொள்கைகளுக்கு மாற்றாக விஜய் எதை முன்வைக்கப் போகிறார் என்பதும், மத்திய அரசுடன் விஜய் எந்த அடிப்படையில் உறவைப் பேண முடியும் என்பதும் விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என வேறு சில ஆங்கில ஊடககள் சுட்டிக்காட்டியுள்ளன.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.