நினைக்கும் போது
நிலமே எழுந்து
வாழ்த்தொலிக்க உம்
வார்த்தைகள் பேசும்.
செங்கோல் வேந்தன்
வேங்கை வீரர்
கொடுங்கோல் வெல்ல
மாண்ட போது மாவீரர்.
வீழ்ந்தவர் பேச்சில்
விளைந்தது இத்தனை.
வாழ்ந்தவர் வார்த்தை
வானுரைத்து போகையில்.
இனியொரு கதை
இராது இதுபோல்.
இவை எழுதியது போல்
இனியிங்கே யாரெழுதுவார்.
புனைந்தெழுதிய இது
புன்னகை சிந்திய
புவிவாழ் மனிதரின்
புண்ணி மிக்க கதை.
புழுதி புரண்ட ஈழத்தில்
புதுமைகள் படைத்தவர்
புண்பட்ட பாட்டின் துயர;
புள்மனதின் சிற்பங்கள்.
ஏழேழு தலைமுறை
ஏனிந்த கொடுமை என்று;
ஏறெடுத்து பேச்செடுக்கும்.
ஏட்டில் நடுகல் விழ்ந்த போதும்.
தீபச்செல்வன் உள்ளத்தில்
தீயாய் எரிந்த கதை.
தீதும் வந்து தன்னை
தீண்டும் என்ற போதும்;
தீட்டிய வண்ணத்தில்
தீராத் தாகத்தில்
தீர்வை எட்டும் எண்ணத்தில்
தீவெல்லாம் சிங்களத்திலும்.
நடுகல் வருகிறது
நாட்டிய நடுகல் எல்லாம்
நாசமாக்கியவர் சந்ததி
நாடிப் படித்து அறிந்திடவே!
உண்மைகளை உரக்க
ஊர் அறிந்து எரிக்க
ஊமை வாழ்வின் விடுதலையாய்
உலா வருவதில் மகிழ்ச்சி.
நதுநசி