செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு (படங்கள்)

இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு (படங்கள்)

1 minutes read
இலண்டனில் பெண்களின் வலிமையையும் ஒற்றுமையையும் கூட்டு உழைப்பையும் மேம்படுத்தும் இலண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் செயற்பாடுகள் ஒன்பது வருடங்களைக் கடந்து பயணிக்கின்றது.
கடந்த வாரம் மார்ச் 8ம் திகதி சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பின் நிகழ்வு இலண்டன் சவுத் ஹரோவில் நடைபெற்றது. அமைப்பு ஆரம்பித்து ஒன்பது வருடங்கள் நிறைவுற்ற இவ்வருடம் மிகச் சிறப்பாகக் கருத்தாழத்துடன் பெண்கள் தினத்தை 08.03.2026 அன்று ஞாயிற்றுக் கிழமை திருமதி அகல்யா நித்தியலிங்கம் அவர்களின் தலைமையில் நடாத்தியிருந்தார்கள். பெண்களின் வலிமையும் ஒற்றுமையும் கூட்டு உழைப்பும் அன்று மீண்டும் நிரூபணமானது.
தமிழ்மொழி, இலக்கியம் சமூக வளர்ச்சி போன்ற துறைகளில் கலந்துரையாடல்கள் ஊடாகவும் களச் செயற்பாடுகள் மூலமாகவும் பெண் ஆளுமைகளின் ஆற்றல்களையும் சாதனைகளையும் அடையாளம் காண்பதில் நீண்டகாலமாக இயங்கிவருகின்றது இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு.
தம்மோடு இணைந்து பணியாற்றும் அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் கூறுவதுடன் அவர்களின் சாதனைகளையிட்டுப் பெருமை கொள்வதாக தமது சர்வதேச பெண்கள் தினச்செய்தியில் தெரிவித்துள்ளார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.