செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சீனு ராமசாமி கவிதைகள்

சீனு ராமசாமி கவிதைகள்

1 minutes read

அகங்காரகன்
……

உள்ளே இருந்தது
புதிதாக ஒன்று வெளியில்
இருந்து வர முடியாது
இறந்தது வெளிப்படும் உடல் புழு
வெவ்வேறு வடிவத்தில்
வேறு பெயர்களில்
பதுங்கி இருக்கிறது
இறங்கும்போது ஏறிக் கொண்டிருப்பதும்
ஏறும்போது இறங்கிக் கொண்டிருப்பது
இழுத்துக் கொண்டே இருப்பதும்
அவனில்லை
அவன்.

000

தவிர்க்க முடியாதவர்களின் உலகம்

தவிர்க்க முடியாமல்
அப்பேருந்தில் அவனுக்கு கடைசி இருக்கை தரப்படுகிறது

தவிர்க்க முடியாமல் முடியாமல்
அவள் வரும்பொழுது எழுந்து நிற்கிறார்கள்

தவிர்க்க முடியாமல்
போட்டியில் அவனுக்கு ஆறுதல் பரிசு தருகிறார்கள்.

தவிர்க்க முடியாமல்
கடைசியில் அப்பதவி உயர்வு அவளுக்கு தரப்படுகிறது

தவிர்க்க முடியாமல்
அவளுக்கு மேடையில் நாற்காலி தருகிறார்கள்

தவிர்க்க முடியாமல்
பந்தியில் அவளுக்கு இடம் தருகிறார்கள்

தவிர்க்க முடியாமல்
அவன் படைப்புகள் பரிசீலிக்கப்படுகின்றன

தவிர்க்க முடியாமல்
அவள் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறான்

தவிர்க்க முடியாமல்
அவன் மேற்படிப்பில் நுழைகிறான்

தவிர்க்க முடியாமல்
அவளை வாழ்த்துகிறார்கள்

தவிர்க்க முடியாமல்
அவனது சாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்

தவிர்க்க முடியாத ஓரிடம்
தவிர்க்க முடியாதவர்களுக்கு இவ்வுலகில் இருக்கிறது,

தவிர்க்க முடியாத உயிர்களை
அணைத்து முத்தமிடத்தான்
தவிர்க்க முடியாத கவிகளின்
கவிதைக்குருதி தவிர்க்க முடியாமல்
இப்பிரபஞ்சத்தில் கலந்திருக்கிறது

000

அவன் யாரிடமும் எதுவும் பேசவில்லை
யாரையும் வசைபாடவில்லை
தெய்வங்களைக் கூட அழைக்கவில்லை
தனியே திரிந்தான்
தனியே மௌனம்
தீவிர அமைதி
அவன் பசித்தலைந்தச் சாலையின்
நிழல் தந்த ஒரு மரத்திற்கு கீழே போய் வெகுநேரம் நின்றிருந்தான்.
அவ்வளவு கோபம்

சீனு ராமசாமி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.