ஊரை இழுத்து
உலகை வழிந்து
மொழியில் பேசி
உறங்கிய நேரம்.
விழித்தெழ காலை
கதிரவன் கதிர்கள்
மறையும் படியிங்கே
குண்டின் புகையில்.
ஓலை விரித்து
கதிர்கள் பறித்து
வளரும் பனையும்
இழந்தது தலையை.
குனியாத தலையோடு
உடல் சுமந்த வெடியும்
பகைமுடித்த போதும்
காட்டி கொடுத்து கெடுத்தார்.
சிற்றின்ப வாழ்வில்
சிறு சுகத்துக்கு காசு
சுகபோகம் வாங்கிய
இனம் பிறந்த சிலர்.
நம்மிடம் மட்டுமல்ல
உலகெங்கும் இது
இருக்கிறது விரவி பரந்து
பார் முழுக்க விழுக்கிவிட.
இனியொரு முறையேனும்
படித்திட மறந்திடாதே!
வரலாற்று பாடமெங்கும்
துரோகம் முளைத்த முறையை.
துருவி எடுத்தெறிந்து
வயிலிடை களையினை
பிடித்தெறிவது போல்.
பயிர் வளம் கொழிக்கும்.
ஈழத்தமிழினம் இனி
தலைநிமிர்ந்து நடக்கும்.
நாளை இங்கே மலரும்
துரோகப்பூவை கருக்கு.
விடியும் ஒரு நாளில் – மண்
மலரும் தேசப்பூவை
காணும் பொழுதில் மனம்
பூரித்துப் போகும்.
நதுநசி