செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வரலாறு வாசிக்கும் எழுத்து | செ. சுதர்சன்

வரலாறு வாசிக்கும் எழுத்து | செ. சுதர்சன்

0 minutes read

(என் சக எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு நேர்ந்த அவலத்தை எழுதியது)

#வரலாறு வாசிக்கும் எழுத்த#
—செ. சுதர்சன்—

அதிகார முட்கம்பி வேலியால்
என் எழுத்துகளை
அடைத்த அவர்களோ
என்னிடம் கேட்டார்கள்…!

ஏன் எழுதுகிறாய் என…

நான் எழுதுவதெல்லாம்
என் நிலத்தை என்றேன்!
என்னை விசாரித்தார்கள்!

நான் எழுதுவதெல்லாம்
மக்களைத்தான் என்றேன்!
என்னைப் பின்தொடர்ந்தார்கள்!

நான் எழுதுவதெல்லாம்
இழந்த வீட்டை என்றேன்!
என்னைக் கைது செய்தார்கள்

நான் எழுதுவதெல்லாம்
என் மாடு மேய்ந்த
புல் தரையை என்றேன்..
என் முதுகில்…
கம்பிகளால் உழுதார்கள்”

நான் எழுதுவதெல்லாம்
பட்டம் ஏற்றிய வெளியை என்றேன்!
என்னைத் தொங்கவிட்டார்கள்…
வெளியில் தலைகீழாக
என் தலை தொங்கியது!

“என் எழுத்துகளை
என்செய்வீர்கள்?” என்றேன்!

தீவுக் கடலுள் நுழையாது
ஒரு வேலித்தீ இட்டார்கள்!

என் எழுத்துகள் எரிந்தன!
யாரும் படிக்கவில்லை!
ஆனால்…
படிக்காமலேயே பரவின!
அலைக் கரங்கரங்கள் தழுவின!

யாருமே வாசிக்காது மறுத்த
என் எழுத்துகளை
வரலாறு வாசித்துச் செல்கிறது!

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.