குறும்படம் | Theft குறள் 282 | இயக்குனர் சஜித் குறும்படம் | Theft குறள் 282 | இயக்குனர் சஜித்

 

மட்டக்களப்பில் இருந்து தற்போது வெளியாகியுள்ள “Theft குறள் 282” ஒரு நிமிட குறும்படம். வேனுதரனின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இப்படம் 282 ஆவது திருக்குறளினை கருப்பொருளாக கொண்டு கதையமைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளம்பிராயத்தை நல்வழிப்படுத்தலுக்கான முயற்சியினை காட்சியமைப்பைப் பயன்படுத்தி சொல்லியிருந்தமை மனதில் நிலைத்து நிற்கின்றது. முடிவில் திருக்குறளின் “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” எனும் 282வது குறள் தோன்றி குறுப்படம் நிறைவு பெறுகின்றது. 

ஒருகாலத்தில் சமூக விழிப்புணர்ச்சிக்கு தெருகூத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையும் அதனூடாக கனதியான தாக்கங்களை உருவாக்கியதன் பின்னணியில் இவைபோன்ற ஒரு நிமிட குறும்படங்கள் மூலம் மேலும் சிறப்பாக சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம் என இக்குறும்படம் நினைக்க வைக்கின்றது.

மட்டக்களப்பு பிரதேசங்களில் அண்மைக்காலங்களில் பல குறும்பட முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. குறும்படக் கலைஞர்களுக்கு வணக்கம் லண்டன் இணையத்தின் வாழ்த்துக்கள்.

 

குறும்படக் கலைஞர்கள் :

Production – VENUTHARAN presents | MY HEART Creations
Direction – Sajith
Cast – Varapragash | Venutharan
Vfx – Mehavannan
Edit – Venutharan

 

குறும்படத்தினை பார்வையிட :

 

 

ஆசிரியர்