முளைகட்டிய வெந்தயத்தின் அற்புதகுணங்கள்……

வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது.
வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை  கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது.
ஸ்டார்ச் இல்லாத பாலிசாக்கரைடு வகை நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால் குடலில் உள்ள உணவு செரித்தலுக்கு  துணைபுரிகிறது.
முளைகட்டிய வெந்தயத்தில் polysaccharide அதிகமாக இருக்கிறது. இவை நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும்.
தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றும்  தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல நிவாரணம் தருகின்றது.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும். ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த  முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம்.
மேலும்,முளைகட்டிய வெந்தயம் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக காய்ச்சல், தலைவலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.

ஆசிரியர்