June 7, 2023 6:34 am

முலாம்பழம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கோடைக்கு குளிர்ச்சி தரும் முலாம் பழம் 

மலிவாக கிடைக்க கூடிய முலாம் பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பானம் தயாரிக்கலாம்.

முலாம் பழம் வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்குகிறது. சிறுநீர் எரிச்சலை தடுக்கும்.மிகுந்த சத்து நிறைந்த உணவாகிறது.
கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், கால் ஸ்பூன் சீரகப் பொடி, 2 சிட்டிகை சுக்குப் பொடி, சிறிது பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு சரியாகும்.

வெயிலால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். சீத பேதி, கழிச்சலுக்கு மருந்தாகிறது.

சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் பானம் தயாரிக்கலாம்.

முலாம் பழத்தின் சதை மற்றும் விதையுடன் சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை வடிக்கட்டி குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் உற்சாகத்தை கொடுக்கிறது.

சிறுநீர் பெருக்கியாக விளங்கும் இது சிறுநீர் எரிச்சலை தடுக்கிறது.

முலாம் பழம் உள் உறுப்புகளின் உஷ்ணத்தை குறைக்கிறது.

வெளிப்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் தோல்நோய்கள் குணமாகும்.

முலாம் பழத்தின் விதை சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்.

முலாம் பழம் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது.

கோடைகாலத்துக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது.

உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.

புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், விட்டமின் ஏ, சி என்று பலவிதச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்