நியூசிலாந்தில் சமோயன் நாட்டவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனரா?

நியூசிலாந்துக்கு சமோயன் நாட்டவர்களை கடத்திய விவகாரத்தில், சமோயன் தலைவர் ஜோசப் அகா மதமதா மீது 10 மனித கடத்தல் குற்றச்சாட்டுகளும் அடிமைகளாக நடத்தியதாக 13 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளது. நியூசிலாந்தில் ஒரு நபர் மீது அடிமைத்தனம் மற்றும் மனித கடத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

இவரால் நியூசிலாந்து அழைத்து வரப்பட்ட அனைவரும் சமோயன் நாட்டவர்கள் என்பதாலும் இவர் சமோயன் நாட்டில் பாரம்பரிய கிராமத்தலைவராக கருதப்படுவதாலும் இவர் நடத்திய விதத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்க அஞ்சியிருக்கின்றனர்.

நியூசிலாந்தில் தோட்டக்கலை ஒப்பந்தக்காரராக செயல்பட்ட மதமதா, 1994 முதல் 2019 வரை இக்குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார். சமோயன் நாட்டவர்களை மூன்று மாத விடுமுறை விசாவில் நியூசிலாந்துக்கு அழைத்துச்சென்ற இவர், பல ஆண்டுகளாக வேலைக்கு அமர்த்தி அடிமைகளைப் போல் நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

இக்குற்றத்திற்காக இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள அல்லது 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதத்தை செலுத்த வேண்டி வரும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஆசிரியர்