செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாட்டை வந்தடைந்தது பாகிஸ்தானில் இருந்து இலங்கை மாணவர்களை ஏற்றிய விசேட விமானம்!

நாட்டை வந்தடைந்தது பாகிஸ்தானில் இருந்து இலங்கை மாணவர்களை ஏற்றிய விசேட விமானம்!

0 minutes read

பாகிஸ்தானில் உயர் கல்விக்காக சென்றிருந்த இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்ட விசேட விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.

பாகிஸ்தானின் லாஹுரில் இருந்த 93 மாணவர்களும், கராச்சியில் இருந்த 20 மாணவர்களுமே இன்று(செவ்வாய்கிழமை) மாலை இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மாணவர்களை அழைத்து வருவதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL – 1206 விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.05 அளவில் இலங்கையினை வந்தடைந்துள்ளது.

விமானிகள் உட்பட 17 பேர் அடங்கிய பணியாளர் குழுவொன்றும் இதன்போது பயணித்துள்ளது. இந்தநிலையில் குறித்த விமானத்தில் வருகை தந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.