கடற்படை சிப்பாய்கள் 197 பேருக்கு கொரோனா; மக்களே அவதானம்!

இலங்கையில் நேற்று (27) மொத்தமாக 65 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 61 பேர் கடற்படை வீரர்கள் என்று சுகாதார அமைச்சு இன்று (28) தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரை மொத்தமாக 197 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்று இராணுவ வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று இராணுவ தளபதியை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 455 ஆக காணப்படுகிறது.

ஆசிரியர்