செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா?

தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா?

1 minutes read

தமிழகத்தில் நேற்று புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தொற்று காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,545 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று மேலும் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 678 பேர் தமிழகத்திலும் 138 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும் ஒருவர் கேரளாவில் இருந்தும் வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 18,545 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சென்னையில் 4 பேரும் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 6 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

மேலம் 567 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 70 பரிசோதனை மையங்கள் மூலமாக நேற்று மட்டும் 1,231 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.