க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்டை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பொது தேர்தல் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளமையினால் பரீட்சைகள் தாமதமாகுமா என பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்தவர், “நாட்டின் தற்போதைய நிலைமையை நாங்கள் அவதானித்து வருகின்றோம். இன்னமும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பரீட்சைகள் தொடர்பில் ஏதாவது தீர்மானம் எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Education #A/L Exam #பரீட்சை #உயர்தரம்