கொழும்பில் வெவ்வேறு இடங்களில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பொரளையில் இளைஞர் ஒருவர் இன்று (26) வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் வெட்டுக் காயங்களுக்குள்ளான அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
பொரளையிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றும் 25 வயதுடைய இளைஞரே குழு மோதலில் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிராண்ட்பாஸ் – இரண்டாம் நவகும்புர பகுதியில் வெட்டுக் காயங்களுக்குள்ளான இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
ஓட்டோவில் பயணித்த ஒருவரால் நேற்று (25) மாலை அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் – இரண்டாம் நவகும்புர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது நண்பருக்கும் இடையில் ஏற்ப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
……….