December 11, 2023 2:48 am

அமைச்சரவை மாற்றத்துக்கு எதிராக ‘மொட்டு’ போர்க்கொடி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அமைச்சரவை மாற்றத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெலவை மாற்றியது முற்றிலும் தவறான விடயம் என்றும அவர் தெரிவித்துள்ளார்.

கெஹலியவுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் சில நடவடிக்கைகளை எடுப்பது சரியானதா என்பது குறித்து ஜனாதிபதி சிந்தித்திருக்க வேண்டும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆனால், இதனை ஜனாதிபதி இன்னமும் உணரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்