இந்தியாவின் முதலாவது பணக்காரர் அதானி

இந்தியாவின் முதல் பணக்காரராகினார் கவுதம் அதானி. இதனை போர்ப்ஸ் நிறுவன வெளியிட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு இந்தியாவின் ரூபாயில் 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ஆகும்.

யார் இந்த அதானி இன்று பல நாடுகளிலும் அதானி குழுமம் என்று பேசப்படும் நிறுவனத்தின் தலைவரே இவர். இவரது வணிக நிறுவனம் குஜராத்தில் 1988 ஆரம்பமானது.

இன்று உலகமே வியந்து பார்க்கும் நிறுவனமாக உள்ளது எந்த கண்டுபிடிப்புகளையும் இவர் கண்டுபிடிக்கவில்லை, எந்த விதமான பணபின்புலமும் இல்லை, கல்லூரி படிப்பை கூட முழுதாக படித்து முடிக்க வில்லை ஆனால் இந்தியாவின் முதல் பணக்காரர் இதெற்கெல்லாம் இவரது நிர்வாக ஆளுமையே காரணம் என்று சமூக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பாக்கட் எண்ணெய் வியாபாரத்தில் இந்தியா முழுவதுமாக 20% கொண்டுள்ளார் என்றால் நம்புவீர்களா இந்தியாவின் டாப் 30 நிறுவனத்தின் பட்டியலில் இவரது 5 நிறுவனம் முதல் இடங்களில் உள்ளது.

இந்தியாவின் முன்னாள் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானியை பின் தள்ளி முன் வந்துள்ளார் என்பது குறிப்பிட்ட வேண்டிய விடயமாக உள்ளது.

மேலும் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

ஆசிரியர்