மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் நடந்து முடிந்த இருபதுக்கு இருபது தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட டேவிட் வோர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்ஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு வீரர்களும் முழங்கால், கணுக்கால் பிரச்சனை மற்றும் ஓய்வு வழங்கப்பட நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் இரண்டு விரைவான அரைசதங்கள் அடித்த கமரூன் கிரீன், சுழற்பந்து வீச்சாளர் அஷ்டன் அகர் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண தொடர் நெருங்கி வரும் நிலையில் எச்சரிக்கையுடன் மற்ற அணிகளுடனான தொடரை அணுகி வருவதாக அவுஸ்ரேலிய தெரிவுக்குழு தலைவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் அவுஸ்ரேலிய அணி, அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்