காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த பங்களாதேஷுக்கு அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ, சிரேஷ்ட வீரர் முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் கைகொடுத்துள்ளது.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ 70 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 66 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 91 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடரவுள்ளது.