உலகத்தில் பொதுவாக மனிதன் மட்டும் இல்லாது எந்த ஒரு உயிரினத்திற்கும் வெளிப்படையாக இருக்கும் ஒன்றைவிட மறைத்து வைத்திருக்கும் ஒன்றின் மீதுதான் ஆர்வம் அதிகரிப்பதாக ஒரு குறிப்பு சொல்கிறது நாமும் அதை ஆராயத் தொடங்கினால் இந்த பதிலைத் தவிர புதிதாக ஒன்றும் நமக்கு கிடைப்பதில்லை என்பது உண்மை. சரி இந்த மறைந்து இருக்கும் ஒன்றிற்கும் இன்றையத் தகவலுக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு பல கேள்விகள் தோன்றலாம். சொல்கிறேன் .
இன்று நாம் எல்லோரும் இந்த இன்று ஒரு தகவலின் வாயிலாக உலகத்தில் கற்பனையில் கூட நம்மால் எண்ணிப் பார்க்க இயலாத பல மர்மங்களையும், அதிசயங்களையும் தனக்குள் உள்ளடக்கி தனித் தன்மையுடன் காட்சித் தரும் பிரமிடுகளைப் பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் .
இந்த பிரமிடுகள் பற்றி நாம் அறிவதற்கு முன்பாக ஒரு நகரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் அலெக்சாண்டிய நகர் அப்படி என்ன இந்த நகரத்தில் இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் பல சந்தேகங்கள் எழலாம் சொல்கிறேன் .
முதல் முதலில் ரோமானியர்கள் கடல்வழியாக வந்து தங்களின் சாம்ராஜியத்திற்கு முதல் பாதம் இந்த நகரத்தின் மண்ணில்தான் பதிக்கப் பாதிக்கப்பட்டு இருக்கிறது . அதுமட்டும் இல்லை ரோமானியர்கள்தங்களின் பெயரை உலகம் எப்பொழுதும் மறக்காமல் மனதில் வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவே கட்டடக் கலையில் பல நுணுக்கங்களை கையாண்ட இடமும் இதுதான். இதையும் தாண்டி வியப்பான ஒரு சிறப்பு இந்த நகரத்தில் என்னவென்றால். இங்கு வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை இன்று பத்து மில்லியனையும் தாண்டிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் மிகப்பெரிய நகரம் என்ற ஒரு தனி சிறப்பே இதற்கு இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்குதான் நாம் இன்று பார்க்கப்போகும் உலகத்தின் மிகவும் பழமைவாய்ந்த அதிசய பிரமிடுகள் பல கட்டப்பட்டு இருக்கின்றது.





