Monday, January 18, 2021

இதையும் படிங்க

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம்...

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நேற்று (சனிக்கிழமை) நாடு முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல் நாளான...

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி...

கொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா...

ராஜஸ்தானில் விபத்து – 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஜாலோர் மாவட்டத்தில் மகேஷ்பூர் என்ற இடத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு இந்த...

ஆசிரியர்

முரளியாக விஜய் சேதுபதி நடிப்பது எம்மை காயப்படுத்தும்: கவிஞர் தீபச்செல்வன்

முரளிதரனாக விஜய்சேதுபதி நடிப்பது ஈழத் தமிழர்களை காயப்படுத்தும் என்று தெரிவித்துள்ள ஈழக் கவிஞர் தீபச்செல்வன், அதனை தவிர்க்குமாறும் நடிகர் விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் ஏன் விஜய் சேதுபதி இந்தப் பாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்பதற்காக குமுதம் இதழில் தீபச்செல்வன் கூறியிருக்கும் காரணங்களை அடுக்கியுள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் செய்தி ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராகவும், ஈழத் தாய்மார்களின் கண்ணீரை கொச்சைப்படுத்தியும் முரளிதரன் பேசிய கருத்துக்கள், நெஞ்சில் சிங்கள இராணுவத்தின் குண்டுகளைப் போலவே தாக்கியுள்ளன.

Image may contain: 2 people, people smiling, text

முரளிதரன் இலங்கை கிரிக்கெட் வீரர் என்பதைவிட அவர், சிங்கள கிரிக்கெட் வீரர் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவருக்கு தமிழ் மாத்திரமே தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஈழத் தமிழர்களையும் அவருக்கு தெரியாது. அவர் பேசுவதுதான் சிங்களம் போல இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஒரு சிங்களவராகவே சிந்திப்பதும் பேசுவதையும் புரிந்து கொண்டோம்.

முத்தையா முரளிதரன் பிறப்பால், தமிழர். ஆனால் அவர் தமிழர் என்பதற்காக ஈழத் தமிழர்கள் ஒருபோதும் பெருமை கொண்டது கிடையாது. முரளிதரன் போல சிங்களத் தலைநகர் கொழும்பில் மொழியாலும் உணர்வாலும் தம்மை சிங்களவராக்கிக் கொண்ட பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் சிங்கள அரசுக்கு ஆதரவாக செயற்படுவதுடன் ஈழத் தமிழ் மக்கள்மீதான இன ஒடுக்குமுறையையையும் சிங்களத் தரப்பில் நின்று நியாயப்படுத்துவார்கள்.

சிங்களப் பகுதியில் இரண்டு சிங்களக் கிராமங்களை தத்தெடுத்துள்ள முரளிதரன் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு சிறு உதவியாவது செய்திருக்கிறாரா? உதவி செய்யாவிட்டால்கூட பரவாயில்லை. உபத்திரம் செய்யாமல் இருந்திருக்கிறாரா?

ஒருமுறை பிரித்தானியா பிரதமர் டேவிட் காமரோன் இலங்கை வந்தார். வடக்கிற்கு சென்று ஈழத் தமிழர்களை சந்திப்பதைததான் அதிகம் விரும்பினார். அவர் வந்திருந்தபோது, போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், ஒரு போராட்டத்தை நடாத்தியிருந்தனர். நடுவீதியில் அந்த மக்கள் கண்ணீரோடு புரண்டழுதனர். சிங்கள அரசால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்க கானடா நாடு உதவ வேண்டும் என்றும் அன்றைய அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழுது குளறினார்கள்.

ராஜபக்சேவின் ஆட்சியில் கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனா, எம்பியாக செயற்பட்டார். ஆனால் முரளிதரன் ஒரு அமைச்சராக இருக்கவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பேசி வந்தார். முப்பது தாய்மார்கள் ஒன்று கூடிப் போராட்டம் நடத்துவதனால், இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று ஆகிவிடாது என்றும், அவர்களை எவரும் தூண்டி இப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றார் முரளி.

தம் பிள்ளைகளை போரின் இறுதியில் சிங்கள அரசிடம் கையளித்துவிட்டு, தெருத்தெருவாக போராடுகின்ற மக்களைப் பார்த்து, இவர்களை எவரும் தூண்டியிருப்பார் என்று சொல்வது எத்தகைய கொடுமை? ஈழத்தின் வடக்கு கிழக்கு நிலமே சிங்கள அரசின் இனப்படுகொலைகளுக்காகவும் காணாமல் ஆக்ப்பட்ட கொடூரங்களுக்காகவும் போராடி வரும் நிலையில் முரளி இவ்வாறு சொல்வது எவ்வளவு அபத்தமானது?

2009 இனப்படுகொலைப் போருக்குப் பிறகு, இலங்கையில் சமத்துவமும் சமாதானமும் நிலவுகின்றது என்றும் 20 வருடமாக இலங்கை அணியில் இருந்த தமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் போரை வெற்றிகரமாக முடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி என்றும் முரளி கூறினார். கிட்டத்தட்ட சிங்களவராக மாறிவிட்ட, முரளிதரனுக்கு பிரச்சினை இல்லை என்பதால் ஈழத் தமிழர்கள்மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இன அழிப்பும் ஒடுக்குமுறையும் உரிமை மறுப்பும் இல்லை என்று ஆகுமா?

ராஜபக்சே போரை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்? ஒன்றரை லட்சம் மக்களை கொன்று, பல ஆயிரம் பேரை காணாமல் ஆக்கி, ஒரு தேசத்தை அழித்து ராஜபக்சே மேற்கொண்ட போர் பாராட்டுக்குரியதா?

இலங்கையில் இப்போது போர் இல்லை. அமைதிதான் நிலவுகின்றது. இதனை சர்வதேசம் குழப்ப வேண்டாம் என்று கூறினார் முரளி. போர் முடிந்த பிறகு கூட அமைதியின் பேரின் ஈழத் தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப் படுகின்றன. வழிபடும் ஆலயங்கள் அழிக்கப்பட்டு, புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவ சூழலில் துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு தீர்வும் அமைதியும் கிடைக்க கூடாது என்ற சிங்களத்தின் குரல்தான் முரளியின் வாயில் ஒலித்தது.

ஈழ இனப்படுகொலைப் போரை நடாத்திய, முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் இன்றைய ஆட்சியாளர்களும், அப் போரின் குற்றத்திலிருந்து தப்பிக்கொள்ள, புலிகளின் முன்னாள் தளபதியும் புலிகளை காட்டிக் கொடுத்தவருமான கருணா அம்மான் எனப்படும் முரளிதரனுடன் முத்தையா முரளிதரனையும் பயன்படுத்தினர். முத்தையா முரளிதரன் இன்னொரு கருணா ஆகிய சூழல் இதுதான்.

விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் நடிப்பது, துரோகி கருணாவின் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பானது. அது அவரது நடிப்புலக சாதனையையே பாழாக்கும் செயல். அவர் இதுவரை அடைந்த சாதனையை போட்டுடைக்கும் வேலை. ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி ஒரு இலங்கை அகதி கதாபாத்திரத்துடன் வைத்துக் கொண்டபோது, ஈழத் தமிழர்கள் அதனை நெகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்.

கனடாவை சேர்ந்த இயக்குனர் ரஞ்சித் ஜோசேப், தன்னுடைய பனை படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சித்தார். 2009 போருக்குப் பிறகு சிங்களப் பகுதிகளில் தாக்குதல் தயார் நிலையில் இருக்கும் ஒரு புலிப் போராளி அடுத்த கட்டமாக என்ன வழியை தேர்ந்தெடுக்கிறான் என்பதே பனை படத்தின் கதை. அப்படியொரு பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால், அது உலகத் தமிழர்களின் திரைப்படமாக இருக்கும்.

மனதால் முழுக்க முழுக்க சிங்களவராக இருக்கும், சிங்கள அரசுக்கு சாதகமாக இருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் அவர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக செயற்படும், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது, நமது விரலை கொண்டே நமது கண்களை குத்தும் செயலாகும். அத்துடன், சிங்கள அரசுக்கும் முரளியின் கருத்துக்களுக்கும் அது அங்கீகாரத்தை அளிக்கும். ஈழத் தமிழ் இனத்தை இன்னும் காயப்படுத்தும். ஈழ அழிப்புக்கு துணையாகும்.

நன்றி – குமுதம்

இதையும் படிங்க

98 வயதில் கொரோனாவை வென்ற இந்த நடிகரை தெரியுமா?

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கமல் நடித்த 'பம்மல்...

மசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடக்கும்!

டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகள்...

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி, 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்!

தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில், முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை ஜெயித்தார். இரண்டாவது...

இரண்டு நாள் விஜயமாக டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்லவுள்ளார். இந்த விஜயத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இதனைத்...

ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 962 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

தொடர்புச் செய்திகள்

“முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழிப்பவர்களுடன் எப்படி இணைந்து வாழ்வது?” | தீபச்செல்வன்

இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது....

அன்று மொழியோடு போர் இன்று நினைவுகளோடு போர் | தீபச்செல்வன்

1974ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் மொழியோடு படுகொலைப் போர் புரிந்த அரசு, இன்று இனத்தின் நினைவுகளோடு போர் செய்கிறது.

புதிய அரசியலமைப்பா? தமிழீழமா? | தீபச்செல்வன்

புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்ற கதை தற்போதைய ஆட்சியிலும் பேசப்படுகின்றது. ஸ்ரீலங்காவை ஆளுகின்ற கட்சிகள் தாம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் | 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை...

13 வருடங்களின் பின் பாகிஸ்தான் சென்ற தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக 13 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 13 பெண்களும்...

மேலும் பதிவுகள்

இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும் | சத்குரு

பொங்கல் வாழ்த்து செய்தியில் சத்குரு வேண்டுகோள் ”படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல்...

ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் குழுவுக்கு உதவியவர்கள் ஹொங்கொங்கில் கைது

கடந்த ஆண்டு தாய்வானுக்கு படகு மூலம் நகரத்தை விட்டு வெளியேற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 12 ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் குழுவுக்கு உதவியது தொடர்பான சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டில் 11 பேரை...

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா?

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் வெடித்தது எரிமலை

இந்தோனேசியாவில் செமெரு என்ற எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை...

சூடானில் பழங்குடியினர் இடையே மோதலில் 83 பேர் பலி!

சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே இடம்பெற்ற மோதலில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் தார்பூர் நகரில் ஐ.நா. சபை மற்றும்...

பிந்திய செய்திகள்

98 வயதில் கொரோனாவை வென்ற இந்த நடிகரை தெரியுமா?

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கமல் நடித்த 'பம்மல்...

சூடானில் பழங்குடியினர் இடையே மோதலில் 83 பேர் பலி!

சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே இடம்பெற்ற மோதலில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் தார்பூர் நகரில் ஐ.நா. சபை மற்றும்...

இந்தோனேசியாவில் வெடித்தது எரிமலை

இந்தோனேசியாவில் செமெரு என்ற எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை...

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம்...

கொரோனாவை சமாளிப்பது இந்த ஆண்டு மேலும் சிரமமாகலாம்!

கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிப்பது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இன்னும் சிரமமாக இருக்கக்கூடும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான...

துயர் பகிர்வு