மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால், உடல் நலக்குறைவால் கோலாப்பூரில் இன்று (02) காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு வயது 89ஆகும்.
அன்னாரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறுதிச் சடங்குகள், கோலாப்பூரில் இன்று பிற்பகல் நடைபெறும் என்று அவரது மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.
காந்தியின் மகனான மணிலால் காந்திக்கு பிறந்த அருண் மணிலால் காந்தி, 2017 இல் The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.