போதைப்பொருளுடன் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு படை முயற்சியால் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்வெளிக்குள் ஊடுருவிய ட்ரோனை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
தேடலுக்குப் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனை கண்டுபிடித்தனர். அதில் இருந்த போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ட்ரோன் எழுப்பிய ஒலியை தொலைத் தொடர்பு கருவிகளின் மூலம் கேட்டறிந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 4 வது டிரோன் இதுவென்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.