செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் லெபனானில் இரு இடங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

லெபனானில் இரு இடங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

1 minutes read

லெபனானில் ஹிஸ்புல்லா (Hezbollah) கிளர்ச்சியாளர்கள் இருந்த இரண்டு இடங்கள் மீது இஸ்ரேல் ஆகாய வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் உள்ள மட்டாட் (Mattat) நகருக்கு அருகில் உள்ள இடத்திலும் சர்ச்சைக்குரிய ஷீபா ஃபார்ம்ஸ் (Shebaa Farms) வட்டாரத்திலும் தங்கியிருந்தனர்.

அந்த இரண்டு இடங்களிலிருந்தும் இஸ்ரேல் மீது எறிபடை, ஏவுகணைத் தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தத் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் சாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி : ஹிஸ்புல்லா என்பது என்ன? எங்கே உள்ளது? என்ன செய்கிறது?

இம்மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் காஸா மீது தாக்குதலை நடத்திவருகிறது.

அதன் பிறகு ஈரான் ஆதரிக்கும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருகிறது.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

மோதலில் 5 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி : இஸ்ரேல் – ஹமாஸ் போரில் லெபனானின் ஹிஸ்புல்லா தலையீடு ஏன்?

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.