அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர், நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறியுள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டில் ஆண் மற்றம் பெண் ஆகியோர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிசூடு நடத்திய நபரை கைது செய்த போது அவர் பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.