சுவிட்ஸர்லாந்தில் பனிச்சறுக்கல் பகுதியொன்றில் நடந்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த 5 பேரும் சுவிட்ஸர்லாந்தின் 4,199 மீட்டர் உயரம் கொண்ட ரிம்ப்ஃபிஷ்ஹார்ன் மலை அருகில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அவர்கள் காணாமற்போனதை அறிந்த ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் அளித்தார்.
பொலிஸார், ஹெலிகாப்டரைக் கொண்டு மலைப்பகுதிகளில் அவர்களைத் தேடினர்.
அப்போது, சுவிட்ஸர்லாந்தின் ஸமாட் நகரிலுள்ள சொகுசு விடுதிக்கு அருகேயொட்டிய பனிச்சறுக்கில் அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் பனிச்சறுக்கிலில் ஈடுபட வந்தவர்கள் என்ற தகவலைத் தவிர, அவர்களை அடையாளம் காண பொலிஸார் தற்போது முயன்று வருகின்றனர்.
மேற்படி விபத்துக்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றனர்.