கிளிநொச்சியின் புகழ்பெற்ற கனகாம்பிகை அம்மனுக்கு ஒன்பது அடுக்குகளில் ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகின்றது. இரணைமடுக்குள கரையோரம் அமையப்பெற்ற அம்மன் ஆலயமானது புதுப்பொலிவுடன் 22 கோடி ரூபாக்கள் செலவில் மீள் நிர்மாணம் பெற்று வருகின்றது.
கிளிநொச்சியின் புவியியல் சார் அடையாளத்தைக் கொடுக்கும் இரணைமடுக்குளத்துடன் கனகாம்பிகை அம்மன் பெருங்கோவிலின் 108 அடி உயரமான நவ தளங்களைக்கொண்ட ராஜகோபுரமும் இணைந்து இப்பிரதேசத்துக்கு தனிக் கம்பீரத்தினைக் கொடுக்க இருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மிகவும் உயர்ந்த கோபுரமாக அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுமான வேலைகள் நிறைவுபெற்று எதிர்வரும் 2026ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் குடமுழுக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக திருப்பணி வேலைகளுக்காக நிதிப்பங்களிப்பினை கனகாம்பிகை அம்மன் ஆலைய திருப்பணிக்குழு வேண்டிநிற்கின்றது.
உங்கள் பங்களிப்பினை கீழ்வரும் ஆலைய வாங்கிக்கணக்கினில் செலுத்தலாமென நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.
Kanakampikai Ambal Perunkoyil
Bank of Ceylon – Kilinochchi
Account No : 0077259253
தொடர்புகளுக்கு:
சிவகுமார் – தலைவர்: 0094 77 869 1045
செந்தாளன் – செயலாளர்: 0094 77 744 3735
ஜசீலன் – பொருளாளர்: 0094 114 70 600