அமெரிக்காவுக்குள் நுழையவதற்கு 12 நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார்.
அதன்படி, ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், காங்கோ, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹெயிட்டி, ஈரான், லிப்யா, சோமாலியா, சுடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருக்கே இவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது.
ஆபத்தானவர்களிடமிருந்து அமெரிக்காவை பாதுகாக்கவே அந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“நமக்கு பிரச்சினையை விளைவிக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களிடம் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பேன் என்று நான் வாக்குறுதி அளித்து இருந்தேன். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய 7 நாடுகளிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு ஒருசில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலராடோவில் நடந்த அண்மைத் தாக்குதலால் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டிருயிருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.