அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான AI 171 விமானத்தில் பயணித்து உயிர்தப்பிய ஒருயொரு பயணி வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதிக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் காயங்களுக்கு உள்ளாகி அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்வையிட்டார்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
தொடர்புடைய செய்தி : விபத்து இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் மோடி விஜயம்
அப்போது விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான ரமேஷ் விஷ்வாஸ் குமாரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ரமேஷ் அமர்ந்திருந்த இருக்கை விமானத்தில் இருந்து உடைந்து விழுந்ததால் உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.
கண் மற்றும் நெஞ்சு பகுதிகளில் காயம் அடைந்த அவர், அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
