பிரான்ஸில் கடற்கரை, பொதுப் பூங்காக்கள் மற்றும் பஸ் தரிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
அத்துடன், நூலகங்களுக்கு வெளியே, நீச்சல்குளம், பாடசாலைகளுக்கு ஆகியவற்றிலும் சிகரெட் பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை இன்றிலிருந்து (29) அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோருக்கு 158 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிகரெட் புகையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனினும், மின் சிகரெட்டுகள் பற்றி பிரான்ஸ் அரசாங்கம் குறிப்பிடப்படவில்லை.
பிரான்ஸில் புகைப்பது தொடர்பான பிரச்சினைகளால் ஆண்டுதோறும் 75,000 பேர் மரணம் அடைவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க விதிக்கப்படும் இந்தத் தடையை 10இல் 6 பேர் ஆதரிப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.