தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமராகத் துணைப் பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான சூரியா ஜுங்ருங்ரியெங்கிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாட்டிடமிருந்து இன்று ஒரு நாள் மட்டும் (02) அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
பேதொங்தார்னை, அந்நாட்டு அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கியது.
தற்காலிகப் பிரதமர் சூரியா, பிரதமர் அலுவலகத்தின் 93ஆம் ஆண்டுநிறைவு நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்தி : தாய்லாந்துப் பிரதமர் அந்நாட்டு நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டார்!
நாளை (03) இடம்பெறும் அமைச்சரவை மாற்றத்துடன் சூரியாவின் தற்காலிகப் பொறுப்பு முடிவுக்கு வரும்.
உள்துறை அமைச்சராக வரவிருக்கும் பும்தாம் விசாயசாய் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.