தெற்கு இலண்டன் வீதியில் நடந்த பல கத்திக்குத்து சம்பவங்களுக்குப் பிறகு நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னதாக டென்மார்க் ஹில் மற்றும் கேம்பர்வெல் நியூ ரோடு சந்திப்புக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை குழுவினர் அனுப்பி வைத்தனர், அங்கு அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என மதிப்பிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.
“ஜூலை 10 வியாழக்கிழமை பிற்பகல் 3.58 மணிக்கு கேம்பர்வெல்லில் கத்திக்குத்து சம்பவம் குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டன.
“டென்மார்க் ஹில் மற்றும் கேம்பர்வெல் நியூ ரோடு சந்திப்பில் அதிகாரிகள் இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலண்டன் ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் இணைந்தனர், அங்கு நான்கு பேர் காயங்களுடன் காணப்பட்டனர்.” என அதிகாரிகள் தெரிவித்தனர்.