இந்திய வரலாற்றில் மிகப் பெரிய வரிக் குறைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தளவுக்கு வரிக் குறைப்பை யாரும் செய்யவில்லை என்று அதனை வர்த்தகச் சமூகம் வரவேற்றுள்ளது.
இந்திய அரசாங்கம் பொருள் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்திருக்கிறது.
அதனால் அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மின்னியல் பொருள்கள் ஆகியவற்றின் விலை குறையும்.
பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கைகொடுக்கும் வகையில் வரி மாற்றம் இடம்பெறுகிறது. இந்தப் புதிய மாற்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்தியா மீது எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 50 சதவீதி தீர்வையை அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
அதனால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.
அதன்படி, இந்தியச் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்தியா வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.