உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத் திகதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் விரைவில் இந்தியா வரவுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது உக்ரைன் ஜனாதிபதி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.