இலண்டன் காட்விக் விமான நிலையத்தில் (London Gatwick Airport) இரண்டாவது ஓடுபாதையை அமைக்கவுள்ள £2.2 பில்லியன் திட்டத்திற்கு போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் (Heidi Alexander) அனுமதி அளித்துள்ளார்.
காட்விக் விமான நிலையம் கிராலி, மேற்கு சசெக்ஸில் (Crawley, West Sussex) அமைந்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் விமான நிலையத்தின் திறன் ஆண்டுக்கு 100,000 விமானங்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காட்விக்கின் தனிப்பட்ட நிதியுதவி பெறும் இந்தத் திட்டத்தில், அவசரகால ஓடுபாதையை 12 மீட்டர் வடக்கே நகர்த்துவது மற்றும், இருக்கும் டாக்ஸிவேகளை (runways-ஐ டெர்மினல்கள், ஹேங்கர்கள் போன்றவற்றுடன் இணைக்கும் பாதைகள்) புதுப்பித்தல் மற்றும் மாற்றுதல் ஆகியவையும் உள்ளடங்கும்.
அத்துடன், இரண்டு டெர்மினல்களையும் விரிவுபடுத்துதல் மற்றும் புதிய விமான வாயில்களை (aircraft gates) நிறுவுதல் உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த விரிவாக்கமானது ஆண்டுக்கு £1 பில்லியன் பொருளாதார நன்மைகளை உருவாக்கும் என்றும், 14,000 வேலைகளை உருவாக்கும் என்றும் காட்விக் தெரிவித்துள்ளது.
புதிய முழுமையான ஓடுபாதையிலிருந்து 2029-க்கு முன்பே விமானங்கள் புறப்படலாம் என்று தெரவிக்கப்படுகின்றது. மேலும், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பே விமானங்கள் புறப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.