இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பிரஜைகளுக்கு புதிய பயண ஆலோசனையை அமெரிக்கா விடுத்துள்ளது.
அதன்படி, நிலை 2 இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது
அதில், மேலும் பல புதிய எச்சரிக்கை குறிகாட்டிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற அபாயங்கள் காரணமாக பயணிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்த போராட்டங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்றும், இலங்கையில் ஏற்கெனவே பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. எனவே, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள், அரச கட்டிடங்கள், ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள்
வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், விமான நிலையங்கள், பிற பொதுப் பகுதிகள் தொலைதூரப் பகுதிகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அவசர சேவைகளை வழங்க அமெரிக்க அரசாங்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட திறன் உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சுற்றுலா இடங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும்போது உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியேற்ற உதவி, மருத்துவக் காப்பீடு மற்றும் பயண இரத்து காப்பீடு குறித்தும் உங்கள் பயணக் காப்பீட்டு வழங்குநரிடம் சரிபார்க்கவும் என்றும் அமெரிக்க பிரஜைகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.