ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கக்கூடாது என்று இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து நெருக்கிவருகிறது.
ரஷ்யா, உக்ரேனில் நடக்கும் போருக்குச் செலவு செய்வதை அது கட்டுப்படுத்தும் என அமெரிக்கா கூறுகிறது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க-இந்தியத் தலைவர்கள் பேசியிருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
இந்தியா, ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெயின் அளவைப் பாதியாகக் குறைத்துவிட்டதாக அது தெரிவித்தது
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இருவரும் நேற்று முன்தினம் (15) பேசிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் பேசியதாகக் கூறப்படுவதை இந்திய வெளியுறவு அமைச்சு நிராகரித்தது.
அப்படி ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை என்று அமைச்சு தெரிவித்தது