இந்தியா – கோயம்புத்தூரில் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பொலிஸார் கைது செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர்கள் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. அத்துடன், அவர்கள் அரிவாளை வைத்துத் தாக்கியதில் ஓர் அதிகாரிக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள், அவர்களது கால்களில் சுட்டனர். பின்னர் அவர்கள் கோயம்புத்தூர் அரச மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 20 வயது கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினார். சந்தேகநபர்கள், பெண்ணின் நண்பரைத் தாக்கிவிட்டு, பெண்ணைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சந்தேகநபர்கள் மூவரும் குணா, கருப்பச்சாமி மற்றும் கார்த்திக் எனும் காலீஸ்வரன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூவரிடமும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.