செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா Brown பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் கைது!

Brown பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் கைது!

0 minutes read

அமெரிக்காவின் பிரவுன் (Brown) பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் தொடர்பில் தற்போது வேறு யாரும் தேடப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக சந்தேகநபரைக் காட்டும் 10 விநாடி வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். அதில் அவர் முகம் தெரியவில்லை. ஆளில்லாத தெருவில் நடந்துசென்று அவர் வகுப்பறை ஒன்றை நோக்கிச் சுட்டதைக் காணமுடிகிறது.

தொடர்புடைய செய்தி : Brown பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபரின் வீடியோ வெளியீடு, வளாகம் முடக்கம்

சனிக்கிழமை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், 9 பேர் காயமடைந்னர். தேர்வு நடந்து கொண்டிருந்த கட்டடத்தில் துப்பாக்கிக்காரர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிவிட்டார்.

கடந்த சனிக்கிழமை கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் பல்லாயிரம் பேர் திரண்டிருந்ததால் தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகப் புலனாய்வாளர்கள் கூறினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.