பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து தாம் ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட மின்னஞ்சல் தகவல்களில், கேட்ஸ் மீது திருமணத்திற்கு வெளியான உறவுகள் மற்றும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வாறான குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக மறுத்துள்ளார். இதுகுறித்து ஒரு ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், அவமானத்திற்குள்ளான நிதியாளர் எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்தது தவறு எனக் கூறிய பில் கேட்ஸ், அந்த உறவை குறித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும், எப்ஸ்டீனின் தனிப்பட்ட தீவுக்கு தாம் ஒருபோதும் செல்லவில்லை என்றும், அவரது மூலம் எந்த பெண்களையும் சந்தித்ததில்லை என்றும் பில் கேட்ஸ் விளக்கமளித்துள்ளார்.