செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் பல் மருத்துவ துறையில் கட்டாய மாற்றங்கள் அவசியம்

இங்கிலாந்தில் பல் மருத்துவ துறையில் கட்டாய மாற்றங்கள் அவசியம்

1 minutes read

இங்கிலாந்தில் பொதுச் சுகாதார அமைப்பின் (NHS) பல் மருத்துவ சேவையில் ஏற்பட்ட நெருக்கடி தீவிரமாகி வருகிறது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், ஏழை நாடுகளில் மருத்துவ சேவைகள் வழங்க உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்புகள் இப்போது இங்கிலாந்தில் அதிகளவில் சேவையை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல மில்லியன் மக்கள் NHS பல் மருத்துவ சேவைகளை அணுகுவதில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் நபர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல் மருத்துவ சங்கம், NHS பல் மருத்துவத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க அடிப்படை சீர்திருத்தம் அவசியம் என எச்சரித்துள்ளது.

பல் மருத்துவர்கள் பற்றாக்குறை, குறைந்த கட்டண அமைப்பு மற்றும் சிக்கலான ஒப்பந்த முறைகள் காரணமாக பலர் பொதுச் சுகாதார சேவையை விட்டு தனியார் துறைக்கு செல்லுவதால் நெருக்கடி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்கு யார்க்ஷயரில் உள்ள Dewsbury பகுதியில், NHS பல் மருத்துவர்களை அணுக முடியாதவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க Dentaid, உள்ளூர் ஆதரவுக் குழுவுடன் இணைந்து செயல்படுகிறது.

சில இடங்களில் பல் மருத்துவ சேவைக்காக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.